Tuesday 31 July 2012

"ஒரு சலாம் என் வாழ்வை மாற்றியது"

1/
இதை படிக்கும் போதும், படித்த பின்பும் நம்முடைய கண்களில் கண்ணீர்.

அனைவரும் கண்டிப்பா இதை படிக்கவும்.


"ஒரு சலாம் என் வாழ்வை மாற்றியது"

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...
(நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.)

முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாம் நோக்கி ஈர்க்கப்பட பல காரணங்கள் இருக்கலாம். குர்ஆன் முழுவதையும் படித்த பிறகு சிலர் கவரப்படுவார்கள், சிலரோ குர்ஆனின் சில வசனங்களை கேட்டதாலேயே ஈர்க்கப்பட்டிருப்பார்கள், வேறு சிலரோ முஸ்லிம்களின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டிருப்பார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

சமீபத்தில் ஒரு கிறிஸ்துவ நபர் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற அந்த ஒரு வார்த்தை தன்னை நோக்கி கூறப்பட, அதனால் ஈர்க்கப்பட்டு, பின்னர் தான் சந்தித்த முஸ்லிம் சிறுவர்களின் நன்னடத்தைகளால் இஸ்லாத்தை கற்றுக்கொண்டு, பின்னர் சிறு போராட்டத்திற்கு பின் இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர்.

இவர் இஸ்லாத்தை தழுவி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகின்றது. இந்த கால இடைவெளியில் இவர் நம் உம்மத்திற்கு செய்துள்ள பணிகள் அளப்பரியவை. தாவாஹ் பணியில் சிறந்து விளங்கும் இவர், இன்றைய முஸ்லிம் தலைமுறையினருக்கு மிகப்பெரும் ஊக்கமாய் திகழ்கின்றார்.

நாம் மேலே கூறியவற்றிற்கு சொந்தக்காரர் சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் (Idris Towfiq)அவர்கள். கத்தோலிக்க பாதிரியாராக பணியாற்றிய இவர், தான் இஸ்லாமை தழுவியது குறித்து கூறிய கருத்துக்கள் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. இன்ஷா அல்லாஹ்.... தொடர்ந்து அவர் சொல்வதை பார்போம்.....


"நான் ஆன்மிகத்தில் மேலும் ஒரு அடி எடுத்து வைக்க விரும்பினேன். பாதிரியாராக வர வேண்டுமென்ற என்னுடைய ஆசையை பிஷப்பிடம் வெளிப்படுத்தினேன்.

ரோமில் என்னுடைய பயிற்சியை முடித்து விட்டு கத்தோலிக்க பாதிரியாராக பிரிட்டனில் பணியாற்ற துவங்கினேன். ஒரு பாதிரியாராக சிறப்பான நாட்கள் அவை. நல்ல மனிதர்களோடு பணியாற்றி கொண்டிருந்தேன்.

என்னை பார்த்து சிலர் ஆச்சர்யத்துடன் கூறுவார்கள் 'சகோதரர் இத்ரீஸ், உங்கள் வாழ்கையில் எவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. நீங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தீர்கள். திடீரென வேறொரு பாதையில் திசை திரும்பிவிட்டீர்கள். என்னவொரு மாற்றம்!!!'

நான் எந்தவொரு மாற்றத்தையும் காணவில்லை. என்னுடைய வாழ்க்கையை திரும்பி பார்க்கின்றேன். அவர்கள் எண்ணுவது போல நான் இரு வேறு பாதையில் இருந்ததில்லை. நேரான வழியில் இருந்ததாகவே நினைக்கின்றேன்.

செயின்ட் தாமஸ் அக்கொய்னஸ், பைபிள், சர்ச்சுகளின் வரலாறு ஆகியவற்றை பற்றிஅன்று ரோமில் படித்து கொண்டிருந்தது, இன்று உங்களுடன் ஒரு முஸ்லிமாக பேசுவதற்குதான் என்று நினைக்கின்றேன்.

பாதிரியாராக வர எனக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை. இன்று, இங்கே, உங்களுடன் ஒரு முஸ்லிமாக பேசுவதற்காகவே பயிற்சியளிக்கபட்டதாக நான் எண்ணுகின்றேன்.

சரி, ஏன் பாதிரியார் பணியை துறந்தேன்? சர்ச்சுகளுடன் எனக்கு எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. ஒரு கத்தோலிக்க கிருத்துவனாக மகிழ்ச்சியாகவே இருந்தேன். என்னுடைய மதத்தை விட்டு விலகும் எந்தவொரு எண்ணமும் எனக்கு தோன்றியதில்லை.

தான் நாடுவோருக்கு வெவ்வேறு வழிகளில் நேர்வழி காட்டுகின்றான் இறைவன். உளவியல் ரீதியாக என்னை பாதிக்கப்பட செய்து நேர்வழி காட்டினான் அவன்.

நீங்கள் அறிந்திருக்கலாம், ஒரு கத்தோலிக்க பாதிரியார் மணம் முடித்து கொள்ள முடியாது. நான் தனிமையில் இருப்பதாக உணர்ந்தேன். கத்தோலிக்க சர்ச்சின் ஒரு அங்கமாக தொடரும் அதே வேலையில், பாதிரியார் பணியிலிருந்து விலகுவதென முடிவெடுத்தேன். மிக கடினமான முடிவு இது.

என்னுள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்னுடைய முடிவு. இதிலிருந்து விடுபட வேண்டுமென்றால் எனக்கு புத்துணர்ச்சி தேவை. சுற்றுலா செல்வதென முடிவெடுத்தேன். என்னிடம் அப்போது அதிக பணமும் இல்லை. குறைந்த செலவில் எந்த இடம் விடுமுறைக்கு ஏற்றதென்று இன்டர்நெட்டில் தேடினேன். நான் கண்டு கொண்ட இடம் எகிப்து.

மணல், ஒட்டகங்கள், பிரமிடுகள் என்று இவை தவிர்த்து எகிப்தை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது....

ஆ...இன்னொரு பிரச்சனையும் இருக்கின்றது....முஸ்லிம்கள்..... !

நான் இதுவரை ஒரு முஸ்லிமை கூட என் வாழ்வில் சந்தித்ததில்லை. டி.வி.க்கள் என்ன சொல்கின்றனவோ அதுதான் நான் முஸ்லிம்களை பற்றி அறிந்திருந்தது. எகிப்திற்கு நான் செல்லும் பயணம் அபாயம் நிறைந்ததாக இருக்கலாம்.

என்னிடம் அப்போது பணமும் இல்லை...வேறு வழியும் இல்லை. எகிப்திற்கு செல்லுவதென முடிவெடுத்தேன்.

எகிப்தில் தங்கிருந்த அந்த ஒரு வாரம் என்னுடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது. என் வாழ்வில் முதல் முறையாக இஸ்லாமை சந்தித்தேன்.

நான் முதன் முதலாக இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டது, இஸ்லாமை பற்றிய ஒரு புத்தகத்தாலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியாலோ அல்லது ஒரு முஸ்லிம் அறிஞராலோ அல்ல. காலணிகளை துடைத்து கொண்டிருந்த அந்த சிறுவனால் தான்.

அன்று அந்த சிறுவனை கடந்து சென்று கொண்டிருந்தேன்.

'அஸ்-------ஸ--------லாமு அலைக்கும்'

அவன் என்னை நோக்கி கூறிய வார்த்தைகள் இவை.

உங்கள் மீது அமைதி நிலவுவதாக என்ற அந்த வார்த்தைகள் அவன் உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகள்.

என் ஓட்டலுக்கு அருகில் அவனது கடை இருந்ததால் நிறைய முறை அவனை கடந்து தான் செல்லுவேன். அவனிடம் பேசுவதற்கென்று சில அரபி வார்த்தைகளை கற்று கொண்டேன்.

அவனை கடந்து செல்லும்போது 'எப்படி இருக்கின்றாய்' என்று கேட்பேன்.

அவன் 'அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனிற்கே)' என்று பதிலளிப்பான்.

ஆக, இஸ்லாம் எனக்கு அறிமுகமானது, அந்த சிறுவன் கூறிய "அஸ்ஸலாமு அலைக்கும்'மற்றும் 'அல்ஹம்துல்லில்லாஹ்' என்ற வார்த்தைகளால் தான்.

விடுமுறை முடிந்து என்னுடைய நாட்டிற்கு திரும்பினேன். இன்னும் எனக்கு இஸ்லாம் குறித்து தெரிந்திருக்கவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டேன். முஸ்லிம்கள் என்பவர்கள் ஊடகங்கள் கூறுவது போன்று இல்லை.

கல்வி பயிற்றுவிப்பது (Idris Tawfiq has a degree in English language and Literature from the University of Manchester) என்னுடைய பின்னணியாக இருந்ததால் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியில் அமர்ந்தேன். குறும்புக்கார சிறுவர்களை கொண்ட பள்ளி அது. மிகவும் குறும்புக்கார மாணவர்கள்.

அந்த சிறுவர்களில் அரபு மாணவர்கள் நிறைய பேர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். என்னுடைய பணி, உலகின் ஆறு முக்கிய மதங்களான புத்தம், இந்து மதம், சீக்கியம், கிருத்துவம், யூத மதம் மற்றும் இஸ்லாம் குறித்து பாடம் எடுப்பது. கிருத்துவத்தை பற்றி நன்கு அறிந்தவன் நான். யூத மதத்தை பற்றியும் போதுமான அளவு அறிவு பெற்றிருந்தவன். மற்ற மதங்கள் குறித்து ஒன்றும் தெரியாது.

இஸ்லாம் குறித்து இந்த மாணவர்களுக்கு நல்ல முறையில் பாடமெடுக்க வேண்டுமென்றால் அந்த மார்க்கம் குறித்து நான் அறிந்திருக்கவேண்டும். ஆகையால், இஸ்லாம் குறித்து படிக்க ஆரம்பித்தேன்.

நிறைய படித்தேன். படித்த தகவல்களை விரும்ப ஆரம்பித்தேன்.

மூன்று, நான்கு மாதங்கள் சென்றிருக்கும்.....நாயகம் (ஸல்) அவர்களது பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் என்னுள் தடுமாற்றத்தை உணர்வேன். அதனை வெளிக்காட்டி கொள்ளாமல் ஏதாவது செய்து சுதாரித்து கொள்வேன்.

ரமலான் மாதம் வந்தது....

இந்த சிறுவர்கள் என்னிடம் வந்தார்கள், 'சார், நாங்கள் தொழ வேண்டும். உங்கள் அறையில் தான் தரைவிரிப்பும் (Carpet), வாஷ்பேசினும் (Wash basin) உள்ளது. உங்கள் அறையில் நாங்கள் தொழலாமா?'

அனுமதித்தேன்.....

சிறுவர்கள் தொழுவதை பின்னால் உட்கார்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். அவர்கள் தக்பீர் கட்டுவது, ருக்கூ (1) செய்வது என இவை என்னை வசீகரித்தது. அவர்களிடம் கூறாமல், இந்த சிறுவர்கள் தொழுகையில் என்னென்ன உச்சரிகின்றார்கள், அந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்பது போன்றவற்றை இன்டர்நெட்டில் தேடி அறிந்து கொண்டேன்.

ரமலான் முடிவில், இந்த சிறுவர்கள் மூலமாக எப்படி தொழ வேண்டுமென்பதை அறிந்திருந்தேன்.

அது போல, ரமலான் மாத ஆரம்பத்திலேயே இந்த சிறுவர்களிடம் கூறியிருந்தேன், உங்களுடன் சேர்ந்து நானும் நோன்பு நோற்பேனென்று. அல்லாஹ்விற்காக அல்ல, இந்த சிறுவர்களை உற்சாகப்படுத்துவதற்காக...

ஆக, ராமலான் மாத முடிவில், எப்படி தொழ வேண்டுமென்பதை அறிந்திருந்தேன், நோன்பும் நோற்றிருந்தேன்.

மேலும் மாதங்கள் உருண்டோடின. முஸ்லிம்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உணர்ந்திருந்தேன். அவர்கள் இனிமையானவர்கள் என்பதை அறிந்திருந்தேன். முஸ்லிம்களுடன் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தது.



இஸ்லாம் குறித்து மேலும் அறிந்து கொள்ள லண்டன் மத்திய மசூதிக்கு செல்ல ஆரம்பித்தேன். மாணவர்களுக்கு சொல்லி கொடுக்க அல்ல, நான் அறிந்து கொள்ள.

சில வாரங்களுக்கு பின்பு, யூசுப் இஸ்லாம் (பிரபல முன்னாள் பாடகரான கேட் ஸ்டீவன்ஸ்)அவர்களின் சொற்பொழிவை அந்த பள்ளிவாசலில் கேட்க கூடிய சந்தர்ப்பம் அமைந்தது. அந்த உரையின் முடிவில் அவரிடம் சென்றேன்.

'நான் முஸ்லிமல்ல. அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக கேட்கின்றேன், ஒருவர் முஸ்லிமாக என்ன செய்ய வேண்டும்'

அவர் கூற ஆரம்பித்தார்...

"இறைவன் ஒருவனே என்பதில் உறுதிப்பாடு கொண்டவர்கள் முஸ்லிம்கள்"

" எப்போதும் ஒரு இறைவனின் மீதே நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்"

"முஸ்லிம்கள் ஐவேளை தொழுபவர்கள்"

"உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அரபியில் எப்படி தொழ வேண்டுமென்று எனக்கு தெரியும்"

என்னை புதிராக பார்த்தார் யூசுப் இஸ்லாம். தொடர்ந்தார்...

"முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள்"

"Actually, ரமலான் மாதம் முழுக்க நான் நோன்பு நோற்றிருக்கின்றேன்"

என் கண்களை நேரடியாக பார்த்த யூசுப் இஸ்லாம், "சகோதரரே, நீங்கள் ஏற்கனவே முஸ்லிம்தான். யாரை முட்டாளாக்க பார்க்கின்றீர்கள்"

பின்னர் "அல்லாஹு அக்பர் (இகாமத்) என்று மக்ரிப் தொழுகைக்கான அழைப்பை கூற ஆரம்பித்தார்கள். அனைவரும் தொழுகைக்காக செல்ல ஆரம்பித்தார்கள்.

நான் மது அருந்தியவனை போல அங்கு நின்று கொண்டிருந்தேன். அவர் கூறிய அந்த வார்த்தைகள் என்னை துளைத்து கொண்டிருந்தன.

தொழுகை நடக்கும் இடத்திற்கு சென்றேன். கீழே ஆண்களும், மேலே பால்கனியில், பெண்களும் தொழுகைக்காக அணிவகுக்க ஆரம்பித்தார்கள். பின்னால், தூணில் சாய்ந்தபடி உட்கார்ந்தேன். தொழுகை ஆரம்பித்தது.

மிக மிக அழகான தருணம் அது. குரானின் வசனங்கள் ஓதப்பட..........அழ ஆரம்பித்தேன்....அழுது கொண்டே இருந்தேன்.... அழுது கொண்டே இருந்தேன்....சிறு குழந்தையை போல அழுது கொண்டிருந்தேன்.....

அந்த தருணத்தில் நான் உணர ஆரம்பித்தேன்., இத்தனை நாளாக நான் தேடிக்கொண்டிருந்த வாழ்க்கையின் அர்த்தம் இன்று இந்த அறையில் முடிவடைந்திருக்கின்றது என்று.

தொழுகை முடிந்ததும் நேராக யூசுப் இஸ்லாமிடம் சென்றேன்.

"சகோதரரே, நான் முஸ்லிமாக வேண்டுமென்று விரும்புகின்றேன். நான் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்"

அவர் சொன்னார், "நான் கூறுவதை திரும்ப கூறுங்கள். வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்".

அவரை பின் தொடர்ந்து கூறினேன், "வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள், அவனது தூதர் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்".

அங்கிருந்த சகோதரர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். அற்புதமான தருணம் அது.

முழுமையான முஸ்லிமாக வாழ்வது, முஸ்லிமல்லாதவரை இஸ்லாமை நோக்கி அழைக்கும் சிறப்பான யுக்தி என்று நான் உறுதியாக நம்புகின்றேன். அதனால், ஒரு உண்மையான முஸ்லிமாக வாழ விரும்புகின்றேன்.

நான் இப்போது மிகுந்த மன அமைதியுடன் உள்ளேன். நான் பெற்ற இந்த மகிழ்ச்சியை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நான் நினைத்து கூட பார்த்திராத வழியில் அல்லாஹ் என்னை வழி நடத்தி கொண்டிருக்கின்றான்.

என்னுடைய அணுகுமுறை முஸ்லிமல்லாதவர்கள் மட்டுமல்லாது முஸ்லிம்களையும் குறிப்பாக இளைஞர்களை கவர்ந்திருப்பது மகிழ்ச்சியை தருகின்றது. இறைவன் நாடினால், தொடர்ந்து என்னுடைய அழைப்பு பணியை செய்து கொண்டிருப்பேன்.

சுபானல்லாஹ்...

இஸ்லாம் போதிக்கும் சிறு வார்த்தைகள் கூட ஒருவர் மனதில் ஊடுருவி இஸ்லாத்திற்கு நல்ல அறிமுகமாக இருப்பது ஆச்சர்யமடைய வைக்கின்றது.

முஸ்லிமல்லாதவரை நோக்கி நாம் சொல்லும் சலாம் கூட ஒரு சிறந்த அழைப்பு பணியாக இருப்பதற்கு சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் அவர்களின் இஸ்லாம் நோக்கிய பயணம் ஒரு அழகிய உதாரணம்.

இஸ்லாம் குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார் இத்ரீஸ் தவ்பிக். இவை மட்டுமல்லாது பத்திரிக்கைகள் மற்றும் இணைய தளங்களிலும் தன்னுடைய பங்களிப்பை செய்து வருகின்றார்.

உலகம் முழுதும் பயணம் செய்து அழைப்பு பணியில் ஈடுபட்டு வரும் சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் அவர்களை தங்கள் பகுதிக்கு, சொற்பொழிவாற்ற அழைக்க விரும்பும் சகோதர, சகோதரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அவருடைய தளத்தில் தங்களது விருப்பத்தை பதிவு செய்யலாம்.

சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் போன்றவர்களை தொடர்ந்து நம்மிடையே தோன்ற செய்து நம்முடைய ஈமானை அதிகரிக்க எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவானாக..ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.


Brother Idris Towfiq's website:
1. idristawfiq.com. link

My sincere thanks to:
1. Canadian Dawah Association.

This article translated from (not a word to word translation):
1. Irish priest embraces Islam - Canadian Dawah Association website. link
2. IQRAA TV - British Catholic priest converted to Islam. link


நன்றி: சகோதரர் - ஆஷிக் அஹமத் அ.

Monday 30 July 2012

உள்ளாடையின் தூய்மையில் மனதை பரிகொடுத்து இஸ்லாத்தைத் தழுவிய ஆங்கிலேயப்பெண்

1/
உள்ளாடையின் தூய்மையில் மனதை பரிகொடுத்து இஸ்லாத்தைத் தழுவிய ஆங்கிலேயப்பெண்.

உள்ளாடையின் தூய்மையில் மனதை பரிகொடுத்து இஸ்லாத்தைத் தழுவிய ஆங்கிலேயப்பெண்

லண்டனில் பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கிப்படிக்கும் கல்லூரி அது. அதில் முஸ்லிம் மாணவர் ஒருவரும் படிக்கிறார். அதில் பணி புரியும் ஒரு ஆங்கிலப் பெண், மாணவர்களின் உணவு பரிமாற்றம் மற்றும் அவர்களின் ஆடைகளைத் துவைத்து சுத்தம் செய்து கொடுப்பதும் ஆகிய வேலையில் பணிபுரிகிறார்.
ஒரு தடவை இப்பெண், அந்த முஸ்லிம் வாலிபரிடம் ‘நான் துணி... துவைத்து சுத்தம் செய்து கொடுப்பதில் உங்களக்கு திருப்தி இல்லையா?’ என்று தனது பலநாள் சந்தேகத்தை மனம் திறந்து கேட்கிறார்.

‘ஏன் இல்லை? எனக்கு முழு திருப்தி உள்ளது. நீங்கள் மிக நன்றாகத்தானே துணியை சுத்தமாக துவைத்துத் தருகிறீர்கள்’ என்று பதிலளிக்கிறார் அந்த முஸ்லிம் மாணவர்.

‘அப்படியெனில் ஏன் உங்களது ஆடையை, ஒருதடவை நீங்களே சுத்தம் செய்து விட்டு இரண்டாவது தடவை மீண்டும் என்னிடம் துவைக்கத்தருகிறீர்கள்?’ என்று தனது சந்தேகத்தைக் கேட்கிறார் அந்த ஆங்கிலப் பணிப்பெண்.

‘இதென்ன வேடிக்கை! எனது ஆடையை நானே சுத்தம் செய்கிறேன் என்றால் எதற்காக உங்களிடம் அதை நான் தரவேண்டும்? உண்மையில் நான் உடுத்திய ஆடையை துவைக்காமல் அப்படியே தான் உங்களிடம் தருகிறேன்’ என்று எதார்த்த நிலையை அப்பெண்ணிடம் சொன்னார் மாணவர்.

இந்த பதில் அந்த ஆங்கிலப் பணிப்பெண்ணை வியப்பின் உச்சிக்கே இழுத்துச்சென்றது. ‘உண்மை நிலை நீங்கள் சொல்வது எனில் மற்ற மாணவர்களுடைய உள்ளாடையில் நான் காணும்; ஒருவித கறையும், துர்வாடையும் உங்களது ஆடையில் மட்டும் காண முடிவதில்லையே! ஏன்?’ என்று ஆச்சரியத்துடன் வினவினார்.

அந்த மாணவர் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக சொன்னார், ‘சகோதரியே! நான் ஒரு முஸ்லிம். எனது மார்க்கம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று என்னை பணிக்கின்றது. எனது ஆடையில் ஒரு துளி சிறுநீர் பட்டுவிட்டாலும் கூட அதை உடனே கழுகி சுத்தம் செய்யாத நிலையில் என் இறைவனை நான் வணங்க முடியாது. எனது ஆடையில் துர்வாடையோ, அசுத்தமோ காணப்படாமல், உடுத்தி களைந்த ஆடைகூட துவைத்து சுத்தம் செய்யப்பட்ட ஆடைபோல் சுத்தமாக இருப்பதன் ரகசியம் இதுதான்!’ என்று விளக்கமளித்தார்.

இதைக்கேட்ட மாத்திரத்தில் அப்பெண், ‘இஸ்லாம் இவ்வளவு சிறிய விஷயத்தில் கூட கற்றுத்தருகிறதா?’ என்று ஆச்சரியத்துடன் புருவத்தை உயர்த்தினார்.

அப்பணிப்பெண்ணுக்கு அவ்வாலிபரின் பேச்சு பேராச்சிரியத்தை ஏற்படுத்தியதுடன் அவரது உள்ளுணர்வையும் தட்டி எழுப்பியது. இதன்பின் அந்த ஆங்கிலப்பெண், அந்த முஸ்லிம் மாணவரின் எல்லா நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து வந்தார். அவ்வாலிபரின் எளிமை, தூய்மை, பத்தினித்தனம், கலாச்சாரம், வீணான பேச்சுக்களைவிட்டும் ஒதுங்கியிருக்கும் பண்பு இவையணைத்தும் அப்பெண்ணின் உள்ளத்தில் இஸ்லாத்தின் ஒளி குடியேறக் காரணமாயிற்று.

படிப்படியாக அவ்வாலிபரிடம் இஸ்லாத்தைப்பற்றி கேட்டு தெரிந்து கொண்டார். இதனால் அப்பெண்ணின் உள்ளத்தில் உண்மையான ஈமானிய ஒளிக்கதிர் சுடர்விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கியது.

இறுதியில் தனது குடும்ப அங்கத்தினர் பலருடன் இஸ்லாத்தின் அரவணைப்பில் வந்துவிட்டடார்.

(ஆதாரம்: ‘அத்தளாமுனில் இஸ்லாமி’ எனும் அரபி நாளேடு)

Daniel Streich; இஸ்லாம்தான் இறுதியான தீர்வு

1/
இஸ்லாம்தான் இறுதியான தீர்வு'' - தானியல் ஸ்ட்ரீக்''இஸ்லாம்தான் இறுதியான தீர்வு'' - தானியல் ஸ்ட்ரீக்

சுவிட்சர்லாந்து நாட்டில் மஸ்ஜிதுகளில் கட்டப்படும் மினாராக்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தலைமை வகித்த சுவிஸ் நாட்டின் அரசியல் தலைவர் தானியல் ஸ்ட்ரீக் - Daniel Streich- சுவிஸ் நாட்டில் மினாராக்கள் கட்டுவதை தடை செய்ய முழு காரணமாக இருந்த சுவிஸ் மக்கள் கட்சியின் முக்கிய உறுப்பினர் இஸ்லாத்தை தழுவியதாக சென்ற மாதம் செய்திகள் வெளிவந்தன. இப்போது அவர் நேர...டியாக சுவிட்சர்லாந்து அரச தொலை காட்சியில் தோன்றி, தான் இஸ்லாத்தை ஏற்றத்தையும் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

இஸ்லாத்தை ஏற்றமைகான காரணத்தை இவர் இப்படி குறிபிடுகின்றார் ''Islam offers me logical answers to important life questions, which, in the end, I never found in Christianity,'' - நான் கிறிஸ்தவத்தில் ஒரு போதும் காணாத வாழ்க்கை பற்றிய மிகவும் முக்கியமான வினாக்களுக்கு இறுதியாக இஸ்லாம் தர்க ரீதியான பதில்களை எனக்கு தந்துள்ளது என்று கூறியுள்ளார்.

இவரை பற்றி சுவிட்சர்லாந்து அரசு தொலை காட்சி இவரைப்பற்றி கூறும்போது; ''He was a true SVPer and Christian. He read the Bible and regularly went to church. Now Daniel Streich, military instructor and community council member, reads the Qur'an, prays five times a day and goes to a mosque!'' - இவர் உண்மையான SVP உறுபினராகவும், வழமையாக கிறிஸ்தவ ஆலையத்துக்கு செல்பவராகவும், பைபிளை படிபவராகவும் இருந்த Daniel Streich என்ற இராணுவ கற்கைக்கான விரிவுரையாளர், சமூக கவுன்சில் உறுப்பினர் இப்போது மஸ்ஜிதுக்கு செல்கிறார், ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் தொழுகிறார், அல் குர்ஆன் படிக்கிறார்'' என்று குறிப்பிடுகிறது.

இவர் சுவிட்சர்லாந்தில் மினாராக்கள் கட்டுவதை தடைச் செய்ய வேண்டுமென்றும், மஸ்ஜிதுகளை பூட்டவேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தை வழி நடாத்திய இவரின் மாற்றம் முழு மேற்கு நாடுகளிலும் பெரும் அதிர்வு அலைகளை எழுப்பி வருகின்றது என்பதுடன் இவருடன் இணைந்து இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான பிரச்சாரம் செய்த கட்சியின் உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்திருபதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுவிட்சர்லாந்து நாட்டில் 4 இலச்சம் முஸ்லிம்கள் வாழ்வதாக சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய அமைப்பு கூறுகின்றது. ஆனால் சுவிட்சர்லாந்தின் 2000 ஆண்டின் மக்கள் தொகை பதிவு 3,11,000 என்று கூறுகின்றது.

இங்கு 100 க்கும் அதிகமான் மஸ்ஜிதுகள் இருக்கின்றன எனிலும் 4 மஸ்ஜிதுகள் மாத்திரம் மினாராகளை கொண்டுள்ளது.
நாடு முழுவதும் ஸ்ட்ரீக் நடத்திய மினாராக்களுக்கெதிரான பிரச்சாரம் இஸ்லாத்திர்கெதிரான மக்களின் எதிர்ப்பை அதிகரித்தது. தனது கடந்த கால நடவடிக்கைகளுக்காக வெட்கப்படுவதாகவும், ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த மஸ்ஜித் கட்டுவதற்கு தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் மினாராக்களை தடை செய்வது குறித்து விருப்ப வாக்கெடுப்பில் சுவிஸ் நாட்டவர்கள் மினாராக்களை தடைச் செய்ய ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்பத்தில் இஸ்லாத்தை கடுமையாக எதிர்த்தவர்களால் தான் இஸ்லாம் அதிகம் வளர்ந்துள்ளது என்பதும் இஸ்லாத்தின் எதிரியாக இருந்தவர்கள்தான் அதிகம் இஸ்லாத்தை வளர்க்கும் பணிக்கு தமை அற்பணித்தார்கள் என்பதும் இஸ்லாமிய வரலாறு.  (Via FB,
Abdul Wahab)


Home

Men; Before and After Accepting Islam as a Way of Life

1/



 Abd al Haqq Kielan ( Arabic 22 June 1941) is a Swedish Muslim cleric. He is an Imam at the mosque in Eskilstuna and at the Islamic Association in Stockholm . He is also chairman of the Swedish Islamic Society
and permanent secretary of the Swedish Islamic Academy.


2/

















Terry Holdbrooks (former American soldier) converted to Islam (2009)
3/


 Michael Jackson's brother Jermaine Jackson Converted To Islam...









4/
 Converts to Islam:-Keith Maurice Ellison (born August 4, 1963) is the U.S. Representative for Minnesota's 5th congressional district , serving since 2007. He is a member of the Democratic-Farmer-Labor Party . The district centers on Minneapolis. He
was re-elected in 2010.[1] Ellison is a co-chair of the Congressional Progressive Caucus. He is the first Muslim to be
elected to the United States Congress . He is also the first African American elected to the House from Minnesota.










5/



 Wayne Parnell Accepts Islam Proof with Hashim Amla Hashim Amla does not wear a Castle Logo on his cricket shirt, said that he did not pocket a cent from his match fee because promoting beer & liquor is against the teaching of ISLAM.


6/

About Me - Dr. Abdullah ( Periyar Dasan ) In the name of Allah, most gracious and most merciful
Assalamu Alaikum My Dear Brother/Sister.
I Accepted Islam on Thursday 11th March 2010
I was well known in India for my atheist theology and later I became to realize that religion is the only way out for human beings both in this world as well as in the hereafter, changed my name to Abdullah from Periyar Dasan Islam is the only religion in the
world that follows a book directly revealed from God. As a student of comparative religions I believes books of other faiths have not been directly revealed to mankind from God. The Holy Qur’an is still in the same format and style as it was revealed to the Prophet Muhammed (S.A.W) from Almighty Allah. I also acted in the famous Tamil film “Karuthamma” about the killing of newborn baby girls in some remote villages in India. The production received national award from the Indian government. I performed Umrah on 15th March 2010, it's my first visit to the holy cities of Makkah and Madinah. About Me - Dr. Abdullah ( Periyar Dasan )

0/

























7




















A former fashion Model and VJ Muhammad Usman Durez who has became a practicing Muslim by virtue of Dawah

Home         Sri Lanka Think Tank-UK (Main Link)

Sunday 29 July 2012

Women; Before and After Accepting Islam as a Way of Life

1/



 2/
 Yvonne Ridley Converts To Islam - 'Guardian' Journalist Yvonne Ridley was the woman who was arrested by the Taliban for entering Afghanistan illegally. She feared severe punishment, but instead she was released
after promising to read about Islam and emerged from her imprisonment praising the civility and courtesy of her captors. News reports of her embracing Islam have proved premature, but as she outlines for The Muslim News, Yvonne Ridley has certainly been wooed by Islam and the Muslims..................


3/
 நேபாளத்தின் புகழ்பெற்ற நடிகையும்,பாடகருமான "பூஜா லாமா" சில மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவினார்

4/

5/


6/

7/




0/




Home

Saturday 28 July 2012

Kristiane Backer converted from Protestantism to Islam

"Kristiane Backer (December 13, 1965 in Hamburg) is a German television presenter, television journalist and author residing in London. In 1992 Backer met former Pakistani cricketer Imran Khan in London. In 1995 she converted from Protestantism to Islam, crediting Imran Khan's influence." - Wikipedia

"Poetry of Hazrat Baba Bulhay Shah (R.A) forced me to visit Pakistan after visiting Pakistan, now i hate Music. MTV sacked me just because i embraced Islam" - Kristiane Backer

Friday 27 July 2012

ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - கன்னியாஸ்திரி இரெனா ஹன்டோனோ

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono
நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றி பயில்வதற்காக அனுப்பப்பட்டேன். என்னுடைய படிப்பிற்கான முழு செலவுகளையும் அந்த தேவாலய நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக் கொணடிருந்தது. ஏனென்றால் என்னுடைய பெற்றோர்கள் இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின் அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்.

பின்னர் பருவ வயதில் தேவாலயத்தைச் சேர்ந்த ''Liaision Maria'' என்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன். Maria என்பது ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் குறிக்கும்.

இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்னவெனில் ''Stray Sheeps'' என்று சொல்லப்படக் கூடிய ''காணாமல் போன ஆடுகளை'' தேடுவதாகும். ''காணாமல் போன ஆடுகள்'' என்று அவர்கள் குறிப்பிடுவது, நம்முடைய உணவுக்காகவும் ஈதுல்-அல்ஹா பெருநாள் குர்பானி கொடுப்பதற்காக அறுக்கிறோமே அந்த ஆடுகளை அல்ல. மாறாக ''காணாமல் போன ஆடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது, ''கிறிஸ்தவர்களல்லாத மற்றவர்களை''. அதாவது இந்த பள்ளி வாசலில் குழுமியிருக்கும் நம்மைப் போன்ற முஸ்லிம்களை அவர்கள் ''காணாமல் போன ஆடுகள் என்று குறிப்பிடுகிறார்கள். நம்மையெல்லாம் கிறிஸ்தவர்களாக்கும் ஒரு மிகப்பெரும் செயல் திட்டம் அவர்களிடம் இருந்துக் கொண்டிருக்கிறது.
ஒரு வருடம் கழித்த பிறகு நான், இந்தோனேசியாவில் மிக அதிக அளவில் றுப்பினர்களையுடைய ஒரு கிறிஸ்தவ அமைப்பின் தலைவியானேன். பின்னர் கன்னியாஸ்திரி ஆவதற்காக ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் சேர்ந்தேன்.

சகோதர சகோதரிகளே! நான் ஒரு முஸ்லிம் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. நான் கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியது. கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியதிலிருந்து, அல்லாஹ் அவனுடைய அடிமையாகிய எனக்கு நேர்வழி காட்டத் துவங்கினான்.

பின்னர் கிறிஸ்தவ பாதிரியார்கள் படிக்கும் மேற்படிப்பாகிய மதங்கள் மற்றும் தத்துவங்களைப் பற்றிய (Theology & Philosophy) உயர்ந்த படிப்பைப் படிப்பதற்காக நான் அனுப்பப்பட்டேன். அங்கு நான் மதங்களைப் பற்றிய ஒப்பாய்வு (Comparative Religion) பாடங்களைப் படித்தேன். இஸ்லாத்தைப் பற்றி பயிற்றுவிக்கப்பட்டேன். ஆனால் உண்மையான இஸ்லாத்தைப் பற்றி அல்ல! இஸ்லாம் என்பது மிக மோசமான மதம் என்று பயிற்றுவிக்கப்பட்டேன்.

''இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் இந்தோனேசியாவிலுள்ள முஸ்லிம்களைப் பாருங்கள்'' என்று எங்களுக்கு விளக்கினார்கள்.

இந்தோனேசியாவில்,

o ஏழைகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

o முட்டாள்களாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

o வெள்ளிக் கிழமை தொழுகையின் போது தங்களின் காலனிகளை தொலைக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

o ஒற்றுமையாக இருப்பதற்கு மறுக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

o தீவிரவாதிகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்
இவர்களுடைய இத்தகைய தவறான போதனையினால் என்னுடைய நன்பர்கள் அனைவரும் ''இஸ்லாம் என்பது ஒரு மிக மோசமான மதம்'' என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள். ஆனால் அதே சமயத்தில் நான் அவர்கள் எடுத்திருக்கின்ற முடிவு உண்மைக்கு புறம்பானது என்றும் தவறானது என்றும் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களிடம், ''நாம் இந்தோனேசியாவை மட்டும் பார்க்கக் கூடாது, மற்ற நாடுகளில் உள்ள நிலவரங்களையும் நாம் பார்க்க வேண்டும்'' என்று கூறினேன்.

உதாரணமாக,

பிலிப்பைன்ஸ் நாட்டில், ஏழைகளாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களுடைய மதம் இஸ்லாம் அல்ல!.அவர்களெல்லாம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.

மெக்ஸிகோ ஒரு ஏழை நாடு. அந்நாட்டில், குற்றவாளிகளாகவும், திருடர்களாகவும், குடிகாரர்களாகவும், கற்பழிப்பு செய்பவர்களாகவும், சூதாட்டக்காரர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்!

அயர்லாந்து குடியரசு நாடு. இந்த நாடு வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கிடையே தீர்க்க இயலாத உள் நாட்டு பிரச்சனையில், சச்சரவில் சக்கித் தவிக்கும் ஒரு நாடு. இந்தப் சச்சரவில் ஒரு முஸ்லிம் கூட இல்லை. இந்தப் சச்சரவு நடப்பது கத்தோலிக்க மற்றும் புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களுக்கிடையில் தான். அவர்கள் தமக்குள்ளாகவே சன்டையிட்டுக் கொண்டு கொலை செய்கின்றார்கள். ஐரோப்பிய சமூகம் அவர்களை ''அயர்லாந்தின் தீவிரவாதிகள்'' என்று கருதுகிறது. அவர்கள் ''ஐரோப்பிய தீவிரவாதிகள்'' என்றும் வகைப்படுத்தப்படுகிறார்கள்.

இத்தாலியைப் பாருங்கள்! போதைப் பொருள் கடத்துபவர்கள், சூதாட்டக்காரர்கள் - இவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அனைத்து மாஃபிய்யாக் கும்பல்களும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.

அப்போது நான் என்னுடைய மேலதிகாரியான பாதிரியாரிடம், ''இஸ்லாம் ஒரு மோசமான மதம் என்று நிரூபிக்கப்படவில்லையே'' கூறினேன். அப்போது நான், இஸ்லாத்தை, இஸ்லாமியர்களிடமிருந்தே படிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்தேன். அதற்கு, ''நான் இஸ்லாத்தின் பலவீனங்களைப் பற்றி மட்டும் படிக்க வேண்டும்'' என்ற கட்டுப்பாட்டுடன் அனுமதியளிக்கப்பட்டென்.

நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக ''இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான்'' என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற ''திரித்துவக் கடவுள் கொள்கைக்கு'' (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. ஆனால் இரவில் நான் குர்ஆனைப் படித்தபோது (சூரா இக்லாஸ்), இறைவன் ஒருவனே! என்றிருக்கிறது. ஆனால் அன்று காலையிலோ தேவாலயத்தில் மதங்களைப் பற்றிய பாடத்தை ரெவ. பாதிரியார் அவர்கள் போதித்த போது ''கடவுள் ஒருவரே! ஆனால் மூவரில் இருக்கிறார் (திரித்துவம் - Trinity) என்று போதித்தார். அதனால் அந்த இரவில் ஒரு சக்தி என்னை மேலும் குர்ஆனைப் படிக்க உந்தியது. என் ஆழமான உள் மனது ''இறைவன் ஒருவனே! என்றும் மேலும் இது (குர்ஆன்) உண்மையானது தான்'' என்றும் கூறிற்று.

மறு நாள் காலையில் தேவாலயத்தில் நான் என்னுடைய பாதிரியாரிடம், விவாதித்தேன்.

''கடவுளின் திரித்துவக் கொள்கை'' (Trinity of God) என்பது பற்றி எனக்கு சரியாக விளங்கவில்லை என்று அவரிடம் நான் கூறினேன்.

கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாகிய நான் இதுவரைக்கும் கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி எப்படி விளக்கம் பெறாமல் இருக்கமுடியும் என்பதைப் பற்றி அந்த பாதிரியார் மிகவும் ஆச்சரியமடைந்தார்.

அந்தப் பாதிரியார் முன் வந்து ஒரு முக்கோனத்தை வரைந்தார். பின்னர் அவர், ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் (three corners) இருப்பதைப் போல, ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறினார்.

அதற்கு நான், உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும். எனவே கடவுள் மூவரை வைத்து சமாளிப்பது என்பது கடினம். எனவே கடவுள் மற்றொருவருக்கு தேவையுடைவராக இருக்க சாத்தியக்கூறு இருக்கிறதல்லவா? இது சாத்தியம் தானே? என்று கேட்டேன்
அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார் ''இதற்கு சாத்தியமே இல்லை'' என்று கூறினார். அதற்கு நான், இது சாத்தியமானதே! கூறி முன்னாள் வந்து, ஒரு சதுரத்தை வரைந்தேன். முக்கோனத்திற்கு மூன்று கோணங்கள் இருப்பதைப் போன்று சதுரத்திற்கு நான்கு மூலைகள் (Four corners) இருக்கின்றனவே என்று கூறினேன்.

அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார், ''முடியாது'' என்று கூறினார். முன்பு ''இதற்கு சாத்தியமே இல்லை'' என்று கூறிய அவர், தற்போது ''முடியாது'' என்று மட்டும் கூறினார்.

நான் கேட்டேன், ''ஏன்?''

அதற்கு பாதியார், ''இது நம்பிக்கை''. நீ புரிந்துக் கொண்டாயோ இல்லையோ அப்படியே ஏற்றுக்கொள், அப்படியே இதை விழுங்கிவிடு. இதைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! இதைப் பற்றி சந்தேகப்பட்டு கேள்வி கேட்டால் நீ பாவம் செய்தவளாகி விடுவாய்! என்று கூறினார்.

இந்த மாதிரியான பதில் எனக்கு கிடைக்கப் பெற்றும் அன்று இரவு குர்ஆனை தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற உறுதியான ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. ஏகத்துவம் குறித்த கடவுள் கொள்கையைக் குறித்து கற்றறிந்த என்னுடைய பாதிரியாருடன் விவாதம் செய்ய விரும்பினேன்.

ஒரு சமயம் நான் என்னுடைய பாதிரியாரிடம், ''இந்த மேசைகளை உருவாக்கியது யார்?'' என்று கேட்டேன். அதற்கு பாதிரியார் பதிலளிக்க விரும்பாமல் என்னையே பதிலளிக்குமாறு கூறினார்.
அதற்கு நான் ''இந்த மேசைகளை உருவாக்கியது 'தச்சர்கள்' (Carpenters)'' என்றேன்.

''ஏன்?'' பாதிரியார் கேட்டார்.
அதற்கு நான் இந்த மேசைகள் ஒரு வருடத்திற்கு முன்பாகவோ அல்லது நூறு வருடத்திற்கு முன்பாகவோ உருவாக்கப்பட்டவைகள். இவைகள் இன்னமும் மேசைகளாகவே இருக்கின்றன. இந்த மேசைகள் எப்போதும் ''தச்சார்களாக'' (Carpenters) மாறமுடியாது. மேலும் ஒரே ஒரு மேசை கூட தச்சராக (Carpenter) மாறுவதற்கு ஒருபோதும் முடியாது.

''நீ என்ன சொல்ல வருகிறாய்?'' பாதிரியார் கேட்டார்.
அதற்கு நான், இந்த பிரபஞ்சத்திலே உள்ள மனிதன் உட்பட உயிருள்ள மற்றும் உயிரற்ற ஒவ்வொன்றையும் கடவுளே படைத்தார். ஒரு வருடத்திற்கு முன்னாள் ஒரு மனிதன் பிறந்தால் அடுத்து வரக் கூடிய நூறு வருடங்களாயினும் அவன் மனிதனாகவே இருப்பான். உலக முடிவு நாள் வரைக்கும் கூட அவன் மனிதனாகவே தான் இருப்பான். ஒரே ஒரு மனிதன் கூட கடவுளாக அவதாரம் எடுக்க முடியாது! மேலும் கடவுளை மனிதனோடு ஒப்பிட முடியாது.

அதற்கு நான் ஒரு உதாரணமும் கூறினேன். ஒரு இராணுவத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களில் ஒருவரை தேர்தெடுத்து அவரை தங்களின் ''ஜெனரலாக'' தேர்தெடுத்தால் அந்த தேர்வு செல்லாததாகிவிடும். ஏன் அவர்களில் 99 சதவிகிதத்தினர் அவரை தேர்வு செய்திருப்பினும் சரியே!

''நீ என்ன சொல்ல வருகியாய்?'' பாதிரியார்
அதற்கு நான், ''மனிதன் உட்பட இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் கடவுள் படைத்தார். மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை கடவுளாக ஆக்கினால் அந்த தேர்வு செல்லாதது'' என்று நான் அந்த பாதிரியாரிடம் விளக்கினேன்.

பின்னர் நான் தொடர்ந்து படித்து வந்தேன். ஒருநாள் நான் என்னுடைய பாதிரியாரிடம், ''என்னுடைய ஆராய்ச்சிகளின் படியும், மதங்களைப் பற்றிப் வகுப்புகளில் படித்ததிலிருந்தும் கி.பி. 325 ஆம் ஆண்டில் தான் முதன் முதலாக இயேசு கடவுளாக கருதப்பட்டார்'' என்று கூறினேன்.

இவ்வாறு இந்த கன்னிகாஸ்திரி அவர்கள் பலவிதங்களில் அந்த பாதிரியாரிடம் விவாதம் புரிந்ததாகக் கூறினார்கள்.

பலவித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு தாம் இஸ்லாமே ஏகத்துவத்தை வலியுத்தும் உண்மையான மார்க்கம் என்றறிந்து இஸ்லாத்தை தழுவிய இந்த முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கன்னிகாஸ்திரி Irena Handono அவர்கள் தற்போது இந்தோனேசியாவில் இருக்கும் Central Muslim Women Movement என்ற அமைப்பின் தலைவியாக இருந்துக் கொண்டு இஸ்லாமிய அழைப்புப் பணியைச் செய்து கொண்டுவருகிறார்.

அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாகவும்.

( இக்கட்டுரை முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono அவர்கள் நான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் என்று விளக்கிய வீடியோ தொகுப்பிலிருந்து சுவனத்தென்றல் நிர்வாகியால் எழுத்தாக்கம் செய்யப்பட்டதாகும்.) குளோபல் இஸ்லாம் - GI

Home             Sri Lanka Think Tank-UK (Main Link)

Wednesday 25 July 2012

ஸாரா பூக்கர் இஸ்லாத்தை ஏற்ற வரலாறு.

1/
அமெரிக்க முன்னால் மாடல் அழகி ஸாரா பூக்கர் இஸ்லாத்தை ஏற்ற வரலாறு.


பிரபல மாடல் அழகியாக இருந்த “ஸாரா பூக்கர்” அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற வரலாற்றை தனது வாக்கு மூலமாக இங்கு முன் வைக்கிறார்.


அமெரிக்காவின் இதயப்பகுதியில் பிறந்த அமெரிக்கப் பெண் நான். மற்றவர்களைப்போல் நானும் அந்தப் பெரிய நகரத்தின் கவர்ச்சிகளுக்கு ஆட்பட்டவளாகத் தான் வளர்ந்தேன். கவர்ச்சிக்கேந்திரமான ஃபுளோரிடாவுக்கு, தெற்கு மியாமி கடர்கரையின் நாகரீக வாழ்வைத்தேடி ஓடினேன்.

ஒரு சாதாரண மேற்கத்திய பெண் எப்படி இருப்பாளோ அப்படியேதான் நானும் இருந்தேன்; ஆம்! என் அழகின்மீது அதிக ஈடுபாடு கொண்டவளாக இருந்தேன். நான் வளர வளர, நாகரீகத்துக்கு அடிமையாகி விட்டேன் என்பதை நன்றாகவே புரிந்து கொண்டேன். எனது அழகான தோற்றமே என்னை பிணைக் கைதியாக்கி விட்டதை உணர்ந்தேன்.

நாகரீக வாழ்வை மேற்கொண்டால் வாழ்க்கையின் தேவைகளுக்கான பொருளாதாரத்துக்கு என்ன செய்வது? இரண்டுக்கும் இடைவெளி அதிகமானது. மதுபானங்கள் பரிமாறப்படும் கேளிக்கை பார்ட்டியை விட்டு விலகி தியானம், சமூக சேவை போன்றவற்றில் கவனத்தை திருப்பினேன். ஆனால் இவைகளால் பெரிய பலன் ஏதும் கிட்டவில்லை. அவ்வப்போது போட்டுக்கொள்ளும் வலி மாத்திரைகள் தற்காலிக நிவாரணத்தைத்தானே கொடுக்கும். அதற்கு மேல் எந்த பலனையும் கொடுக்காது அல்லாவா? என்னுடைய மன வலிக்கு அழுத்தமான தீர்வுதான் என்ன?

செப்டம்பர் 11, 2001. அப்பொழுதுதான் இஸ்லாத்தைப்பற்றி, இஸ்லாமிய கலச்சாரத்தைப்பற்றி, அதன் மதிப்பைப்பற்றி கேள்விப்படுகிறேன். அதுவரை இஸ்லாம் என்றாலே பெண்களை ”கூடாரத்துக்குள்” அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் மதம், மனைவியாக வருபவளை அடித்து உதைக்கும் மதம், பயங்கரவாத மதமாகத்தான் அறிந்து வைத்திருந்தேன்.

அப்பொழுதுதான் ஒருநாள் திருக்குரானை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரே மாதிரியான மேற்கத்திய கருத்துக்களுக்கு மாற்றமான அதன் நடை என்னை மிகவும் கவர்ந்தது. இருப்பு, வாழ்க்கை, படைப்பு, படைத்தவனுக்கும் படைப்புகளுக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.

இதயத்தோடு ஒன்றிப்போகும் அதன் வார்ததைகளை விளக்க எவருமே தேவையில்லை எனும் அளவுக்கு என் ஆன்மாவோடு (அதன் வார்த்தைகள்) ஒன்றிப்போனது என்றுதான் சொல்வேன். இறுதியாக உண்மை எது என்பதை விளங்கிக்கொண்டேன்.

கடைவீதிக்குச்சென்று நீளமான அழகான ‘கவுன்’ ஒன்றை வாங்கி வந்தேன். முஸ்லீம் பெண்மணிகள் தலையை மறைக்க அணியும் துணியையும் கட்டிக்கொண்டு நான் தினசரி நடந்து செல்லும் வீதிகளில் நடக்க ஆரம்பித்தேன். அதே வீதியில்தான் நேற்றுவரை கவர்ச்சிகரமான குட்டையான (ஷார்ட்ஸ்) மற்றும் நீச்சலுடைகளுடன் நடந்து சென்றேன். வீதியில் அதே பழைய முகங்கள், அதே பழைய கடைகளைத்தான் பார்க்கிறேன். ஆனால் மிகப்பெரிய வேறுபாட்டை என் உள்ளம் காண்கிறது. ஆம் சுதந்திரப்பெண்மணியாக இப்போது என்னை நான் உணர்கிறேன். மற்றவர்கள் என் கவர்ச்சியான உடலமைப்பை ஆசையோடு நோக்கும் அந்த பார்வையிலிருந்து தப்பித்து நான் விடுதலை அடைந்து விட்டது போல், என்னை சுற்றியிருந்த விலங்குகள் அறுந்து விழுவது போல் உணர்ந்தேன்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கவர்ச்சியான என் உடலமைப்பை வேட்டையாடும் மனிதர்களிடமிருந்து எனக்கு முழு விடுதலை கிடைத்துவிட்டது என்று உள்ளம் குதூகளித்தது. அந்த நேரத்தில் என் மனம் அடைந்த நிம்மதியை எப்படி வர்ணிப்பது என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.

அதுமட்டுமின்றி எனது தோள்களில் இருந்து ‘பெரிய சுமை’ கீழிறக்கி வைக்கப்பட்டது போல் உணர்ந்தேன். முன்போல நான் ஷாப்பிங் செய்வதிலும், ஒப்பனை செய்து கொள்வதிலும், கூந்தலைச் சரி செய்து கொள்வதிலும் எனது நேரத்தையெல்லாம் வீணடிப்பது நின்றுபோனது. நான் முழு சுதந்திரம் அடைந்துவிட்டதாக என்று உணர்ந்தேன்.

”பெண்களை அவமதிக்கும் மதம்” என்று சிலரால் வர்ணிக்கப்படுகின்ற இஸ்லாத்தை உளப்பூர்வமாக முழு மனதோடு ஏற்றுக்கொண்டேன். அவர்கள் சொல்லும் காரணமே, இஸ்லாத்தை எனக்கு இன்னும் நெறுக்கமாக்கியது. முஸ்லீமான ஒருவரை நான் திருமணமும் செய்து கொண்டேன். நான் ஹிஜாபை அணிந்து கொண்டாலும் நிகாபை அணிந்து கொள்ள வேண்டும் என்பதிலேயே மிகவும் ஆர்வமாக இருந்தேன்.

எனது முஸ்லீம் கணவரிடம் எனது எண்ணத்தை வெளிப்படுத்தியபோது ‘ஹிஜாப்’ அணிந்து கொள்வதுதான் பெண்களுக்கு கடமையே தவிர ‘நிகாப்’ அல்ல, என்றார். (ஹிஜாப் என்பது பெண்கள் முகம் மற்றும் கை கால்கள் தவிர உடம்பின் மற்ற பகுதிகளை மறைப்பது, ‘நிகாப்’ என்பது முகத்தையும் மறைப்பது கண்களைத்தவிர)

நல்ல முஸ்லிம்களாக இருப்பதற்கும், கணவன்மார்களுக்கு ஆதரவு கொடுத்து பொறுப்புகளை எடுத்துக் கொள்வதற்கும், குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்து மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியவர்களாக ஆக்குவதற்கு முஸ்லிம் பெண்களுக்கு என்னால் ஆனதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

நம்மைப் படைத்த அல்லாஹ்வை திருப்திப் படுத்துவதற்காக, ‘ஹிஜாப்’ அணியும் நமது உரிமைக்காகப் போராடும் அதே வேளையில்; ஹிஜாப், நிகாப் அணியாத பெண்களுக்கு, நாம் இதை ஏன் அணிய வேண்டும், ஏன் இது நமக்கு மிகவும் அவசியம் என்பதை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, ‘ஸ்டைல்’ என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது. இதை நான் முஸ்லிமல்லாத முன்னாள் பெண்மணியாகவும் உரக்கச் சொல்வேன்.

சௌத் பீச்சில் என் நீச்சலுடையையும், கவர்ச்சியான மேற்கத்திய வாழ்க்கை முறையையும் கழற்றி எறிந்து விட்டு, என்னைப் படைத்தவனோடு நிம்மதியாக இருப்பதிலும் சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழும் ஒரு பெண்ணாக என்னைச் சுற்றியிருப்பவர்களோடு வாழ்வதில்தான் எனக்கு அளவிலா மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கிறது.

நேற்றுவரை நீச்சலுடையை பெண்ணினத்தின் சுதந்திரக் குறியீடாக நினைத்திருந்தேன். ஆனால் அது முற்றிலும் தவறு. அசிங்கமான மேற்கத்திய வாழ்க்கை முறையைத் தேர்வு செய்யும் பெண்களே, ”நீங்கள் எதை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிய மாட்டீர்கள்.” ( தகவல் உதவி : UKTJ)

Home            Sri Lanka Think Tank-UK (Main Link)

Sunday 22 July 2012

இறைவா! நீ என்னை அச்சுறுத்தி விட்டாய்...

1/



2/
குர்ஆன், மற்ற எந்த ஒரு ஆவணங்களையும் விட முற்றிலும் வேறுபட்டது (It is a very fascinating document. It is unlike any other document). எந்தவொரு மத புத்தகங்களையும் விட குர்ஆன் எனக்கு சிறந்ததாக தெரிந்தது. ஏன்?, அது என்னுள் ஆழமாக ஊடுருவியது. அது ஒரு அற்புத உணர்வு. ஊடுருவியது மட்டுமல்லாமல் என்னிடத்தில் ஒரு நிறைவான தாக்கத்தை அது ஏற்படுத்தியது. என்னை அதனுடன் மிகவும் ஒன்ற வைத்தது. என்னை மிகவும் பாதித்த குர்ஆனுடைய வசனங்களென்றால், "நீங்கள் உண்மையாளராக இருந்தால் இது போன்ற ஒன்றை கொண்டு வாருங்கள்" என்று மனித குலத்திற்கு அது விடும் சவால்கள் தான். இவை எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை தந்தன. ஏனென்றால் இது போன்ற சவால்களை வேறு எந்தவொரு புத்தகத்திலும் நான் கண்டதில்லை.

சரி, குர்ஆன் ஏன் இப்படியொரு சவாலை விட வேண்டும்?, குர்ஆனைப் பற்றிய என்னுடைய ஆராய்ச்சிகளை மேலும் அதிகப்படுத்தின அந்த வசனங்கள். என் கேள்விகள் தெளிவுபெற ஆரம்பித்தன. முடிவாக குர்ஆனைப் போன்ற ஒன்றை உருவாக்க முடியாது என்றுணர்ந்தேன். இந்த புத்தகம் ஒரு அதிசயம், இது இறைவனிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும். என் முஸ்லிம் நண்பர் அன்று பேசியது மரணத்தைப் பற்றி. "ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும்" என்ற குர்ஆன் வசனம் தான் அன்றைய உரையாடலின் தலைப்பு. அந்த தலைப்பை அவர் விளக்கிய விதம் இருக்கின்றதே......

என்னால் அது எப்படியிருந்தது என்று இப்போது திரும்ப கூட சொல்ல முடியாது. மிக அற்புதமான விளக்கம் அது. அவ்வளவுதான், வீட்டிற்கு விரைந்தேன். என் அறைக்குள் நுழைந்து தாளிட்டேன். "இறைவா, நீ என்னை அச்சுறுத்தி விட்டாய் அஹ் (You scared the beep out of me, ah)" அந்த கணம், என்னுள் இருந்த குழப்பம் ஒன்றுமில்லாமல் ஆனது. நான் எனக்குள் விளையாடிக்கொண்டிருந்த ஆட்டமெல்லாம் உளுத்து போயின.]

அக்னாஸ்டிஸம் To இஸ்லாம்...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

"ATHEISM (நாத்திகம்)" கேள்விப்பட்டிருக்கிறோம், அது என்ன "Agnosticism"? உங்களில் சிலருக்கு இந்த கேள்வி எழுந்திருக்கலாம். அதனால், முதலில் "Agnosticism" என்றால் என்னவென்று பார்த்துவிட்டு பிறகு பதிவுக்கு செல்வோம். இன்ஷா அல்லாஹ்.

நாத்திகத்தை பின்பற்றுபவர் நாத்திகர் என்றால், "Agnosticism"தை பின்பற்றுபவர் "Agnostic (அக்னாஸ்டிக்)". (குறிப்பு: அக்னாஸ்டிக் என்பதற்கு சரியான தமிழ் பதம் தெரியாததால் அப்படியே பயன்படுத்தபடுகின்றது. அறிந்தவர்கள் தெரிவிக்கவும்) இவர்களும் நாத்திகர்களைப் போல கடவுளைப் பற்றி பேசும் மதங்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால், நாத்திகர்களைப் போல கடவுள் இல்லையென்று ஆணித்தரமாக மறுக்க மாட்டார்கள். கடவுள் இருந்தாலும் இருக்கலாம் என்பது இவர்களது கொள்கை.

சுருக்கமாக சொல்லப்போனால், இவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் கிடையாது, கடவுளைப் பற்றிய சந்தேகத்தில் இருப்பவர்கள். Agnostic - One who is skeptical about the existence of God but does not profess true atheism ஏன் அக்னாஸ்டிக் பற்றி பேசுகிறோம்?

ஏனென்றால், இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது அப்படியிருந்த ஒரு நபரைப் பற்றி தான். அவர் அக்னாஸ்டிக்காக இருந்து இஸ்லாத்திற்கு வந்தவர். சகோதரர் ஹம்சா அன்ட்ரியஸ் ஜார்ஜிஸ் (Hamza Andreas Tzortzis) இங்கிலாந்தை சேர்ந்தவர். 2002 ஆம் ஆண்டு இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட இவர், பிரிட்டனின் புகழ் பெற்ற தாவாஹ் அமைப்பான இஸ்லாமிய கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (Islamic Education and Research Academy, IERA) முக்கிய உறுப்பினர்.

பிரபல நாத்திகர்களுடன் தொடர்ந்து நேரடி விவாதத்தில் பங்கேற்றுவருபவர். இன்ஷா அல்லாஹ் இந்த பதிவில் அவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் குறித்து One Legacy வானொலிக்கு அளித்த பேட்டி உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.

"என்னுடைய தந்தை கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவர், என் தாய் சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்தவர். என் பெற்றோர்கள் எந்தவொரு மதத்தின் மீதும் ஆர்வம் காட்டியதில்லை. நான் சிறுவனாக இருந்தபோது என் தந்தை கூறியது இன்னும் நினைவிருக்கின்றது,
"கடவுள் உனக்குள்ளேயே இருக்கின்றார்"

என் தந்தையின் அறிவுரைகள் பெரிதும் உதவின. சிறு வயதிலிருந்தே எதையும் கேள்வி கேட்டு, ஆராய்ந்து பார்த்து தான் ஏற்றுக்கொள்ள முயற்சிப்பேன். புது விஷயங்களை படிப்பதிலும் ஆர்வம் அதிகம். பல மொழிகளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டியிருக்கிறேன். இஸ்லாம், பௌத்தம் என்று பல மதங்களை மேலோட்டமாக அறிந்து வைத்திருந்தேன்.

இவ்வுலகம், நாம் இங்கிருப்பதற்க்கான காரணங்கள் என்று இவற்றை தேடுவதில் தனி விருப்பம்.
எனக்கு புத்த மதத்தின் மீது ஒருவித ஈர்ப்பிருந்தது. அதற்கு காரணம், அது அக்னாஸ்டிக் வகையான மதம் என்பதால் தான். உதாரணத்துக்கு, புத்தரிடம் ஒருவர் கேட்டாராம்,
"கடவுள் இருக்கிறாரா?"
அதற்கு புத்தர் சொன்னாராம்;
"இருந்தாலும் பிரச்சனையில்லை (It does not matter if he exists)" என்று, "இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதுதான் முக்கியம்"
இது போன்றவற்றால் புத்த மதம் என்னை பெரிதும் வசீகரித்தது. எனக்கு இஸ்லாம் நன்கு அறிமுகமானது பள்ளி காலங்களில் தான். என்னுடன் படிக்கும் முஸ்லிம் நண்பர்களிடம் பல கேள்விகளை கேட்பேன். "ஏன் இப்படி உடையணிகின்றீர்கள், ஏன் ஐவேளை தொழுகின்றீர்கள், ஏன் மற்றவர்களை சகோதரரென்று அழைக்கின்றீர்கள்" என்று பல கேள்விகள். அவர்கள் எளிமையாக பதிலளித்துவிடுவார்கள், "இஸ்லாம் சொல்கிறது, செய்கிறோம்", அவ்வளவுதான் அவர்களது பதில்.
சில சமயங்களில் அவர்கள் இஸ்லாம் சொல்லாத செயல்களை செய்தால், "இது இஸ்லாமிய வழியில்லையே" என்று எடுத்துக் கூறுவேன். என்னுடைய இந்த அறிவுரைகள் அவர்களுக்கு வியப்பைத் தரும். எனக்கு இஸ்லாத்தின் மேல் எந்தவொரு ஈடுபாடும் கிடையாது, "உங்கள் மதம் பற்றி எனக்கும் தெரியும்" என்று காட்டிக்கொள்ளவே இதெல்லாம்.

பல்கலைகழகத்தில் உளவியல் பாடத்தில் சேர்ந்தேன். தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு வருடம் விடுப்பு எடுத்துக்கொண்டு, காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவில் (Police IT Department) வேலைக்கு சேர்ந்தேன். இது பிரிட்டன் வெளியுறவுத் துறையின் கீழ் வருகின்றது. ஐரோப்பிய அலுவலக கலாச்சாரங்கள் அறிமுகமாயின. அது ஒரு கிறிஸ்துமஸ் சமயம். பார்ட்டிகள் களைகட்ட ஆரம்பித்திருந்தன. என் அலுவலகத்திலும் அது போன்ற ஒரு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். வெளியிலிருந்தும் பலரை அழைத்திருந்தார்கள்.

எனக்கு நடனமெல்லாம் வராது. ஒரு இடத்தில் அமர்ந்து நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். மது, ஆட்டம், பாட்டம். அப்போது ஒரு பெண் என் அருகில் வந்தார். அவரது பெயரைக் கேட்டேன். சொன்னார். எனக்கோ ஆச்சர்யம். அது இஸ்லாமிய பெயராக தெரிந்தது. நான் மறுபடியும் அவரிடம் கேட்டேன்.

"நீங்கள் முஸ்லிமா?"
"ஆம், முஸ்லிம்தான்"
அதை கேட்டவுடன் எனக்கு மிகுந்த அதிர்ச்சி.
என்ன? பார்ட்டிகளில் ஒரு முஸ்லிமா?
"நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் இங்கே? ஒரு முஸ்லிம் இங்கெல்லாம் வரக்கூடாதே?
நான் அப்படி கேட்டதும் அவரது முகம் சோர்ந்து விட்டது. அவரது கையில் இருந்த மதுவை வாங்கி அதற்கு பதிலாக ஆரஞ்சு பழச்சாறை ஊற்றி கொடுத்தேன். முஸ்லிம்கள் தான் மது அருந்தக் கூடாதே. என்னுடைய செயல் அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

"என்ன செய்கின்றீர்கள் நீங்கள்? என்னுடைய மார்க்கத்தை எனக்கே சொல்லிக் கொடுத்து கொண்டிருக்கின்றீர்கள், அதுவும் இந்த சூழ்நிலையில்..."
என்னுடைய செயல் அவரை மிகவும் கவர்ந்து விட்டது. இருவரும் உரையாடத் துவங்கினோம். கலாச்சாரங்கள், இஸ்லாம் என்று பலவற்றையும் பேசினோம். நிச்சயமாக இது போன்ற பேச்சுக்களுக்கு அது சரியான இடமல்ல. எங்களை சுற்றி மது, ஆட்டம், பாட்டம் தான். நீங்களே யூகித்து கொள்ளுங்கள் அந்த சூழ்நிலையை.

அதற்கு பிறகு பல மாதங்கள் கடந்தன, அவரைப் பற்றி ஒரு தகவலும் இல்லை. ஒருநாள் என் அலுவலகத்தின் மனிதவளத்துறையிலிருந்து அழைப்பு.
"மிஸ்டர் ஜார்ஜியஸ், ஒரு பெண்மணியிடமிருந்து உங்களுக்கு அழைப்பு" யாரது? அலுவலக தொலைப்பேசியில் அழைப்பது?
தொலைப்பேசியை வாங்கினேன். அந்த பெண் தான். எங்களின் பழைய சந்திப்பின் போதே கைப்பேசி எண்களை பரிமாறிக்கொண்டோம். ஆனால் அவர் அதை தொலைத்திருக்கின்றார். இப்போது என் அலுவலக எண்ணை எப்படியோ கண்டுபிடித்து அழைத்து விட்டார்.

மறுபடியும் எண்களை பகிர்ந்துக் கொண்டோம். இந்த முறை எங்கள் நட்பு மேலும் வளர்ந்தது. அருங்காட்சியகம், சினிமா, பார்ட்டிகள் என்று ஒன்றாக செல்ல ஆரம்பித்தோம். ஐரோப்பிய கலாச்சாரத்தை நினைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நான் அவருடன் இருந்த நாட்களில் இஸ்லாமைப்பற்றி அதிகம் பேசியிருக்கின்றேன். ஆனால் அவருக்கோ அவையெல்லாம் விநோதமாக இருந்தது. நிச்சயமாக அவருக்கு அது பிடிக்கவில்லை. ஒரு ஆண் தோழர் இப்படி பேசுவதை அவர் விரும்பவில்லை.

பிறகு நாங்கள் அவரவர் வழியே சென்று விட்டோம். அவர் ஆசிரியராக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார், அது நிமித்தமாக வட இங்கிலாந்திற்கு சென்று விட்டார்.
சுமார் ஒரு வருடம் கடந்திருக்கும். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை. நன்றாக தூங்கிக் கொண்டிருந்தேன். கீழேயிருந்து என் தந்தை சத்தமாக அழைத்தார்,

"அன்ட்ரியஸ், உனக்கு ஒரு அழைப்பு"
தூக்க கலக்கத்திலேயே கீழே இறங்கி வந்தேன்.
"நான் தான் (It's me)"

சுதாரித்து கொண்டேன். அதே பெண்தான்.
"ஒ.........."
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு வருடத்திற்கு பிறகு ஏன் அவர் அழைக்க வேண்டும்?

"உங்களிடம் நான் ஒன்றை சொல்ல வேண்டும். தற்போது இஸ்லாமை முழுமையாக பின்பற்ற தொடங்கியிருக்கின்றேன். ஐவேளை தொழுகின்றேன். ஒரு இஸ்லாமிய பெண் எப்படி உடையணிய வேண்டுமோ அப்படி அணிகின்றேன்"

அவ்வளவுதான் பேசினார். என் பதிலுக்கு அவர் காத்திருக்கவில்லை, இணைப்பை துண்டித்து விட்டார்.
என்னால் நம்பவே முடியவில்லை. This is amazing.......

எனக்கு இஸ்லாத்தின் மேல் எந்த காலத்திலும் நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால் ஒரு பெண் தன் மார்க்கத்துக்குள் திரும்பி வர நான் காரணமாய் இருந்திருக்கின்றேன், எப்படி? என்னால் மறக்க முடியாத, என் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வு அது.

பிறகு, வாழ்வின் அர்த்தங்களைப் (Purpose of Life) பற்றிய என்னுடைய தேடல் தீவிரமடைந்தது. சாதாரண நாற்காலியே ஒரு காரணத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கும் போது, நாம் இவ்வுலகில் இருப்பதற்கு காரணமே இல்லையா? இது போன்ற கேள்விகள் என்னுள் அதிகம் எழ ஆரம்பித்தன. என் தேடல் விரிவடைந்தது.

காட்டின் ஒரு மூலையில் வாழும் ஒரு வித அந்துப்பூச்சிகள் (Moth), மரத்திலிருந்து வழியும் பாலை (Sap) அருந்தி வாழுகின்றன. அதே மரத்தில் அவற்றிற்கு கீழே உள்ளே மற்றொரு வித அந்துப்பூச்சிகள், முதல் வித அந்துப்பூசிகள் வெளியேற்றிய கழிவுகளை பருகி வாழ்கின்றன. இவையெல்லாம் தானாகவே தற்செயலாக உருவாகியிருக்கும் என்பது போன்ற வாதங்களை தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நாமனைவரும் மிருகங்கள் என்றால் ஒழுக்கம் (Morale), எது சரி எது தவறு போன்றவை எப்படி தெரியும்?
இவ்வாறாக, வாழ்வின் அர்த்தம் (Purpose of Life), தத்துவம் (Philosophy), அறிவியல் (Science), தர்க்கவியல் (Logic) என பல துறைகளை துணையாகக் கொண்டு எனது தேடல்கள் விரிவடைந்தது. கடவுள் என்ற ஒரு கோட்பாடு (concept) இல்லாமல் எதுவும் அறிவுக்கு ஒத்துவரவில்லை (This is the only thing that makes sense). மிக நீண்ட தேடல்களுக்கு பிறகு கடவுள் நிச்சயமாக இருக்கின்றார் என்ற முடிவுக்கு வந்தேன்.

இப்போது யார் என்னிடத்தில் வந்து கடவுள் இல்லையென்றாலும் அவர்களுடன் தர்க்கரீதியாக விவாதித்து கடவுள் உண்டு என்று நிரூபிக்கும் அளவு நம்பிக்கை பெற்றிருந்தேன். சரி, கடவுள் உண்டென்ற முடிவுக்கு வந்தாகி விட்டது. கடவுள் நம்மை படைத்து அப்படியே விட்டு விட்டாரா?, நமக்கு எதுவும் சொல்ல அவர் விரும்பவில்லையா? கடவுள் இருக்கிறாரென்றால் அவர் நமக்கு நிச்சயம் ஏதாவது சொல்லியிருக்க வேண்டும் (He must have expressed something). அது தான் அறிவுக்கு ஒத்து வருகிறது.

இப்போது குர்ஆன்னை முழுமையாக படிக்கத் தொடங்கினேன். குர்ஆன், மற்ற எந்த ஒரு ஆவணங்களையும் விட முற்றிலும் வேறுபட்டது (It is a very fascinating document. It is unlike any other document). எந்தவொரு மத புத்தகங்களையும் விட குர்ஆன் எனக்கு சிறந்ததாக தெரிந்தது.

ஏன்?, அது என்னுள் ஆழமாக ஊடுருவியது. அது ஒரு அற்புத உணர்வு. ஊடுருவியது மட்டுமல்லாமல் என்னிடத்தில் ஒரு நிறைவான தாக்கத்தை அது ஏற்படுத்தியது. என்னை அதனுடன் மிகவும் ஒன்ற வைத்தது. என்னை மிகவும் பாதித்த குர்ஆனுடைய வசனங்களென்றால், "நீங்கள் உண்மையாளராக இருந்தால் இது போன்ற ஒன்றை கொண்டு வாருங்கள்" என்று மனித குலத்திற்கு அது விடும் சவால்கள் தான். இவை எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை தந்தன. ஏனென்றால் இது போன்ற சவால்களை வேறு எந்தவொரு புத்தகத்திலும் நான் கண்டதில்லை.

சரி, குர்ஆன் ஏன் இப்படியொரு சவாலை விட வேண்டும்?, குர்ஆனைப் பற்றிய என்னுடைய ஆராய்ச்சிகளை மேலும் அதிகப்படுத்தின அந்த வசனங்கள். என் கேள்விகள் தெளிவுபெற ஆரம்பித்தன. முடிவாக குர்ஆனைப் போன்ற ஒன்றை உருவாக்க முடியாது என்றுணர்ந்தேன். இந்த புத்தகம் ஒரு அதிசயம், இது இறைவனிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும்.

இப்போது, குர்ஆன் ஒரு அதிசயம் (Miracle) என்று வாதிக்குமளவு நம்பிக்கை பெற்றிருந்தேன்.
ஆக, இறைவனைப் பற்றியும் சரி, குர்ஆனைப் பற்றியும் சரி, விவாதிக்க நான் தயார்.
எல்லாம் தான் தெளிவாகி விட்டதே. நான் அப்போது முஸ்லிமாகி விட்டேனா என்று நீங்கள் கேட்டால்..... இல்லை!

அங்குதான் பிரச்சனையே ஆரம்பித்தது. இஸ்லாம் என்ற கொள்கை அந்நியமாக தெரிந்தது. என்னால் அதனுடன் ஒன்ற முடியவில்லை. இஸ்லாம் என்ற ஒரு வரையறைக்குள் என்னால் வர முடியவில்லை. எனக்குள் அறிவார்ந்த விளையாட்டுகளை ஆடிக் கொண்டிருந்தேன் (I started to play intellectual Gymnastics). இதுவென்ன புது குழப்பம்? புரியவில்லை.

குர்ஆனை எடுத்துக்கொண்டு கிரீசுக்கு என் தாத்தா பாட்டியுடன் சிறிது காலம் தங்கி வரலாம் என்று சென்றேன். அங்கு தான் தொழுகையை செயற்படுத்தி பார்த்தேன். இங்கிலாந்திற்கு திரும்பினேன். என்னுடைய குழப்பங்கள் அதிகமாகியிருந்தது. அப்போது ஒரு கல்லூரி மாணவர் சொன்னார்,

"நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்; ''ஒருவர் சஜ்தாவில் இருக்கும்போது இறைவனுடன் நெருக்கமாக இருக்கின்றார்''
''அப்படியா?''. அடுத்த முறை நான் சஜ்தா செய்த போது, உரக்க கூறினேன்,

"இறைவா, தயவு கூர்ந்து எனக்கு உதவி செய் (come on, solve my problem). எனக்குள்ளே என்ன நடக்கின்றது? நீ இருக்கின்றாய் என்று என்னால் நிரூபிக்க முடியும். குரான் ஒரு Miracle என்று என்னால் நிரூபிக்க முடியும். ஆனால் என்னால் முஸ்லிமாக முடியவில்லை. இது மிகப் பெரிய குழப்பம். உதவி செய், தயவு கூர்ந்து உதவி செய்"

ஒன்றும் நடக்கவில்லை,,,,,Nothing was ticking........ .finished.
அக்னாஸ்டிக்காக தொடர்ந்து விட வேண்டியது தான்.

அது 2002 ஆம் ஆண்டு அக்டோபர் நான்காம் தேதி. அதிகாலை இரண்டு மணி. கதவு தட்டும் சத்தம். என் நண்பர். இந்த நண்பருடைய வீடு என் வீட்டிலிருந்து பத்து நிமிட நடை பயணத்தில் தான் இருக்கின்றது. ஆனால் அவர் என் வீட்டிற்கு அவ்வளவாக வந்ததே கிடையாது. ஆனால் இப்போதோ அதிகாலை இரண்டு மணி. எதற்கு வந்திருக்கின்றார்?

வெளியே அழைத்தார். பேசிக்கொண்டே நடந்தோம். அவர் அன்று பேசியது மரணத்தைப் பற்றி. "ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும்" என்ற குர்ஆன் வசனம் தான் அன்றைய உரையாடலின் தலைப்பு.

அந்த தலைப்பை அவர் விளக்கிய விதம் இருக்கின்றதே......
என்னால் அது எப்படியிருந்தது என்று இப்போது திரும்ப கூட சொல்ல முடியாது. மிக அற்புதமான விளக்கம் அது.
அவ்வளவுதான், வீட்டிற்கு விரைந்தேன். என் அறைக்குள் நுழைந்து தாளிட்டேன். "இறைவா, நீ என்னை அச்சுறுத்தி விட்டாய் அஹ் (You scared the beep out of me, ah)" அந்த கணம், என்னுள் இருந்த குழப்பம் ஒன்றுமில்லாமல் ஆனது. நான் எனக்குள் விளையாடிக்கொண்டிருந்த ஆட்டமெல்லாம் உளுத்து போயின. அடுத்த நாள். டாக்சியை பிடித்தேன். அருகிலிருந்த பள்ளிக்கு சென்றேன். அங்கிருந்த சுமார் ஐம்பது சகோதரர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்"

ஸுப்ஹானல்லாஹ்....

சொல்ல வரும் கருத்துக்களை தெளிவாக, தர்க்க ரீதியாக சொல்ல விரும்புபவர் சகோதரர் ஹம்சா அவர்கள். நாத்திகர்களுடனான அவரது பல வாதங்கள் யுடியூபில் (You tube) கிடைக்கின்றன. அவரது தளத்திலும் (முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது) அவற்றை பார்க்கலாம்.

நாத்திகர்களுடனான உங்கள் உரையாடல்களுக்கு நிச்சயமாக சகோதரர் ஹம்சாவின் பதிவுகள் மற்றும் வீடியோக்களை பரிசீலிக்கலாம். (via FB)

This article inspired by:
1. Br.Hamza's Interview to "One Legacy Radio"
Source of Information and Br.Hamza's blog:
http://www.hamzatzortzis.blogspot.com/
1. Br.Hamza's Official website:
1.http://hamzatzortzis.com/
IERA official website:
http://www.iera.org.uk/

References:
1. Meaning of the term "Agnostic" taken from thefreedictionary.com.
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
source: http://www.ethirkkural.com/


Home